முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.7 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ   ரஷ்யாவில் 7.7 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

நில நடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியை 7.7 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதனையடுத்து பசுபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் இருந்து ஹவாய் வரையில் 0.3 மீட்டர் அளவுக்கு மேல் சுனாமி அலைகள் தக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது.

ரஷ்யாவின் நிகோல்ஸ்கேயோயிக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 199 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நில அதிர்வுகள்

ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா பகுதிக்கும், அலஷ்காவின் அலெயுடியன் பகுதிக்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது தொடர்ச்சியாக பல்வேறு அதிர்வுகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து