முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாதங்களுக்கு பிறகு பாக். சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மீது மீண்டும் விசாரணை தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் :  நவாஸ் ஷெரீப் மீது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

பனாமா ஊழல்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் பல நாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக பனாமா நாட்டின் சட்ட நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு வெளியிட்ட ஆவணங்களில் கூறப்பட்டு இருந்தது.

ஊழல் வழக்கு

இந்த குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு, 6 உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டு விசாரணை குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு 60 நாட்களில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கையாக கடந்த 10–ந் தேதி தாக்கல் செய்தது. அதில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகன்கள், மகள் மரியம் ஆகியோரது வருமானத்திற்கும், அவர்களது உண்மையான சொத்துக்கும் இடையே குறிப்பிடத்தக்க முரண்பாடு காணப்படுவதால் அவர்கள் மீது ஊழல் வழக்கு தொடர அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மீண்டும் தொடங்கியது

இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. அப்போது நவாஸ் ஷெரீப் சார்பில் விசாரணை குழுவின் அறிக்கையை எதிர்த்து ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், இருதரப்பு வக்கீல்களும் தங்களது வாதத்தை முன்வைத்தனர். இதையடுத்து இதன் மீதான விசாரணையை நீதிபதிகள் நேற்று வரை ஒத்தி வைத்தனர்.

விசாரணையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமாபாத் நகரில் சுப்ரீம் கோர்ட்டை சுற்றி 700–க்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து