முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே புனித உத்திரியமாதா ஆலய திருவிழா

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      திண்டுக்கல்
Image Unavailable

  நத்தம்,- திண்டுக்கல் மறைமாவட்டம்,நத்தம் அருகே  செந்துறை கத்தோலிக்க கிறஸ்தவ பங்கு, நல்லபிச்சன்பட்டியில் புனித உத்திரியமாதா ஆலய திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 14&ந்தேதி மாலை செந்துறை பங்குத்தந்தை ஜோசப் சேவியர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று பாலக்காடு தந்தை கிறிஸ்துதாஸ்,வின்சென்ட் ஆகியோரின் கூட்டு  திருப்பலி நடைபெற்றது.
 2 ம்நாள் நிகழ்ச்சியில் புனித உத்திரியமாதா வேண்டுதல் பொங்கல் வைத்தனர். பெருமாள்பட்டி பங்குத்தந்தை பால்ராஜ்,மைக்கேல்ராஜ் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடந்தது. அன்று இரவு புனித உத்திரியமாதா வேண்டுதல் தேர்பவனியும் வலம் வந்தது.  3 ம்நாள் மாலையில் பொதுபொங்கல் வைத்தனர்.திண்டுக்கல் பெஸ்கி கல்லு£ரி அதிபர் ஆண்டோ,ஜெயபாஸ்கர்,செந்துறை பங்குத்தந்தையர்கள் ஜோசப் சேவியர்,வின்சென்ட்,தாஸ் ஆகியோர் இணைந்து சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தினார்கள்.அன்று இரவு வானவேடிக்கையும்,தாரைதம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா மற்றும் புனிதர்களின் மூன்று சப்பர பவனியும் வலம் வந்தது.அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது,திருச்சி விஜய் குழுவினரின் 7 நோட்ஸ் வழ்ங்கும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.
 17 ந்தேதி மாலை புனிதர்களின் மூன்று தேர்பவனியும் நடந்தது. தொடர்ந்து துவரங்குறிச்சி பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் திப்பலியும்,கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள் ஜோசப்சேவியர்,வின்சென்ட்,தாஸ் மற்றும் நல்லபிச்சன்பட்டி,கிளைப்பங்கு,செந்துறை பங்கு கிறிஸ்துவ இறைமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து