சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி ்கோயில் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      மதுரை
mdu news

மதுரை.- சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி  ்கோயிலில் வருகிற 23.07.2017 அன்று நடைபெறவுள்ள ஆடி அமாவாசை  ிழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்   கொ.வீர ராகவ ராவ், மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  ஆகியோர் தலைமையில்;   டி.கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
  ிழாவின் போது சட்டம், ஒழுங்கு காத்து சுமூக நிலையை ஏற்படுத்திட ஏறத்தாழ 1300 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர், வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினருடன் இணைந்து பணியாற்றவும், மலையடிவாரப் பகுதிகளில் தேவையான அளவு சோதனைச் சாவடிகள் அமைத்து  ்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களுடன் தடை செய்யப்பட்ட பொருட்களையோ, போதைப் பொருட்களையோ, தீப்பற்றக் கூடிய பொருட்களையோ அல்லது பிளாஸ்டிக் பைகளையோ எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இத் ்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் அழகாபுரி வரை இயங்கவும், மேலும் அழகாபுரியிலிருந்து தாணிப்பாறைக்கு போதுமான தொடர்பேருந்துகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தற்காலிகமாக 7 வாகனக்காப்பகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  ்கோயில் வளாகத்தில் மற்றும் மலைப்பாதையில் மின்னாக்கி மூலம் தேவையான அளவு மின் விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் மலைப்பாதையில் குறுகலான மற்றும் ஒற்றையடி பாதைகளை பக்தர்கள் செல்ல ஏதுவாக சீர்படுத்தி நல்ல முறையில் வைக்கப்பட்டுள்ளது.  பக்தர்களின் குடிநீர் வசதிக்காக மலைப்பாதையில் ஒவ்வொரு அரை கிலோ மீட்டருக்கும் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்படும்.  மேலும் சுந்தர மகாலிங்கம் கோயிலில் 85000 லிட்டர் தண்ணீரும், சந்தன மகாலிங்கம் கோயிலில் 35000 லிட்டர் தண்ணீரும் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 
 மலைப்பாதையில் வயதான பக்தர்களின் வசதிக்காக 24 டோலிகள் காவலர்களின் உதவியோடு பணிபுரிவதற்கு ஏற்பாடு செய்யப்படும். குப்பைகளை சேகரிப்பதற்காக ஆங்காங்கே 100 குப்பைத்தொட்டிகள் அமைக்கப்படும்.  14 இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.  இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் மருத்துவக்குழுக்கள் தேவையான மருந்துகளுடன் நியமிக்கப்படுவார்கள்.  108 ஆம்புலன்ஸ்கள் 4ம், இருசக்கர ஆம்புலன்ஸ் 2ம், 2 நடமாடும் மருத்துவக்குழுக்களும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்படும். 
  சுகாதாரப்பணிக்காக 54 துப்புரவுப்பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.  வாழைத்தோப்பு, தாணிப்பாறை, வத்திராயிருப்பு, மாவூத்து, சதுரகிரி மலைப்பாதை மற்றும் கோயில் பகுதிகளில் 25 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர்கள், காவல் துறை மற்றும் வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை வனப்பகுதிக்குள் பக்தர்கள் எடுத்துச்செல்லக் கூடாது என பக்தர்களுக்கு மலையேறும் முன் விளம்பரம் செய்திட ஏற்பாடு செய்யப்படவுள்ளது.  அத்துடன் பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்களிடம் குழு அமைத்து, அக்குழுவினர் தொடர்ச்சியாக மலைப்பாதையில் சென்று தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 மேலும் பொதுமக்கள் தாணிப்பாறை வழியாக வருகின்ற 20.07.2017 முதல் 25.07.2017 வரை சுவாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தாணிப்பாறை வழியாக மலையின் மீது ஏறி சென்று வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.மணிவண்ணன்,இ.கா.ப., விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மு.இராசராசன்,இ.கா.ப., மதுரை மாவட்ட வன அலுவலர்  சமர்த்தா,  பயிற்சி ஆட்சியர்  ரஞ்சித் சிங்,இ.ஆ.ப., விருதுநகர் மாவட்ட வன உயிரின காப்பாளர்  அசோக்குமார்,இ.வ.ப., மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி, உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லெட்சுமி, பேரையூர் வட்டாட்சியர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து