முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: சுஷ்மா

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியென வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்து உள்ளார்.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவால்கோட் பகுதியை சேர்ந்தவர் ஒசாமா அலி (வயது 24). ஒசாமா அலியின் சிறுநீரகத்தில் கட்டி ஏற்பட்டு பெரிதும் அவதிபட்டு வருகிறார். அவர் டெல்லியில் சிகிச்சை பெற விரும்புகிறார். இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளது. நாங்கள் அவருக்கு விசா கொடுப்போம், பாகிஸ்தானிடம் இருந்து கடிதம் தேவையில்லை,” என குறிப்பிட்டு உள்ளார்.

நெருக்கடி இல்லை ...

பாகிஸ்தானை சேர்ந்த நோயாளிகள் பெரும்பாலும் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இந்தியா எந்தஒரு நெருக்கடியையும் காட்டுவது கிடையாது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கொடுக்கும் கடிதத்தை கொண்டே இந்தியா இதுவரையில் விசா வழங்கி வருகிறது.

அனுமதி மறுப்பு

இந்தியா கருணையின் அடிப்படையில் பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற விரைவில் நடவடிக்கையை எடுக்கிறது. ஆனால் பாகிஸ்தானை பொருத்தவரையில் அது மாறுப்பட்டது. குல்பூஷன் ஜாதவின் தாயார் அவரை பார்க்க பாகிஸ்தான் செல்ல விசாவிற்கு அனுமதி கோரிஉள்ளார்.  சுஷ்மாவும் பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் பாகிஸ்தான் அவருக்கு விசா வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதற்கு சுஷ்மா பாகிஸ்தானுக்கு கண்டனத்தையும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து