முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் நியமனம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பாரத் அருணும், துணை பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
தலைமை பயிற்சியாளர் ...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். ஆனால் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் நியமிப்பதில் இழுபறி நிலவியது. கங்குலி, தெண்டுல்கர் மற்றும் லட்சுமண் ஆகியோரை கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக்குழு ஜாகீர் கானை பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ராகுல் டிராவிட்டை பேட்டிங் ஆலோசகராகவும் நியமிக்க பரிந்துரை செய்தது.

பரிந்துரை மட்டுமே ...

பரிந்துரையை நாங்கள் ஏற்றால்தான் அது முழுமைப்பெறும், ஆகவே, ஜாகீர்கான் மற்றும் டிராவிட்டின் பெயர்கள் பரிந்துரை மட்டுமே. ரவி சாஸ்திரியிடம் ஆலோசித்த பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு தெரிவித்தது.

ஆலோசனை - நியமனம்

மேலும், ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை நடத்த பிசிசிஐ பொறுப்புத் தலைவர் சி.கே. கன்னா, பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி, சிஒஏ உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோரை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நேற்று ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசனை நடத்திய பின்னர், பாரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராகவும், சஞ்சய் பங்கரை துணை பயிற்சியாளராகவும், ஆர். ஸ்ரீதரை பீல்டிங் பயிற்சியாளராகவும் அறிவித்துள்ளது. இவர்கள் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை வரை அப்பதவியில் நீடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து