முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா போர்நிறுத்த மீறலில் ஈடுபடுகிறதாம்: பாகிஸ்தான் அபாண்டபழி போடுகிறது

புதன்கிழமை, 19 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத்  :  இந்தியா போர்நிறுத்த மீறலில் ஈடுபடுகிறது என்று அபாண்ட பழிபோடும் பாகிஸ்தான் இந்திய துணைத்தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருவது பாகிஸ்தான்தான். இது உலகம் அறிந்த விஷயம். இந்திய பகுதிக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காகவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல் செய்து வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் அப்போது தவறுதலாக பொதுமக்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாயும். இதனால் ஒரு சிலர் காயம் அடையலாம். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய தரப்பில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்திய ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் இதனால் அப்பாவி பொதுமக்கள் பலியாகிவருவதாகவும் கூறி இஸ்லாமாபத்தில் உள்ள இந்திய துணைத்தூதர் ஜே.பி.சிங்கை பாகிஸ்தானுக்கான தெற்காசியா மற்றும் சார்க் அமைப்பு டைரக்டர் முகமத் பைசல் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு அப்பாவி பொதுமக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்றும் இது மனிதாபிமானத்திற்கு எதிரானது என்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என்றும் பைசல் கூறியுள்ளார்.

இருநாடுகளுக்கிடையே கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடக்க வேண்டும். எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் போர்நிறுத்த மீறல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தியாவை பைசல் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் வெளியுறவு   அமைச்சக அதிகாரி நபீஷ் சகாரியா கூறுகையில்  பரோக் மற்றும் தண்டர் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டது என்றார்.

இதற்கு முன்பு இந்திய தூதரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  அழைத்து இந்திய ராணுவம் போர்நிறுத்த மீறலில் ஈடுபடுவதாகவும் அப்பாவி மக்கள் பலியாகி வருவதாகவும் புகார் செய்தது. பாகிஸ்தானின் இந்த புகாரும் கண்டனமும் தன்னுடைய அத்துமீறலை மூடி மறைக்க மேற்கொள்ளும் தந்திரமான செயலாகும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து