முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி 20 மாநாட்டில் டிரம்ப், புடின் ரகசிய சந்திப்பா?

புதன்கிழமை, 19 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பெர்லின், ஜெர்மனியில் நடந்த ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசியமாக இரண்டாவது முறை சந்தித்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்ஸிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், சீனா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் கடந்த 7, 8-ம் தேதிகளில் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் முதல்முறையாக சந்தித்துப் பேசினர்.

அந்தச் சந்திப்பில் சிரியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் ட்ரம்பும், புடினும் ரகசியாக இரண்டாவது முறை சந்தித்து பேசியதாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "டிரம்ப் மற்றும் புடினுக்கு இடையே இரண்டாவது சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை. ஆனால் விருந்தின் இறுதி தருணத்தில் சில நிமிடங்கள் இருவரும் பேசி கொண்டனர். ஆனால் இந்தச்ச்செய்தியை வெள்ளை மாளிகை மறைந்துள்ளதாக ஊடகங்கள் கூறுவது பொய்யானது அபத்தமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து