முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றவாளிகளை ஒப்படைக்கும் விவகாரம்: இந்தியா, பிரிட்டன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 19 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

லண்டன், குற்றவாளிகளை ஒப்படைப்பது, விசா பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா, பிரிட்டன் அதிகாரிகள் லண்டனில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஐ.பி.எல் முறைகேடு வழக்கில் சிக்கிய லலித் மோடி, வங்கி மோசடியில் சிக்கிய விஜய் மல்லையா உள்ளிட்டோர் பிரிட்டனில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அந்த நாட்டின் சிக்கலான விசா நடைமுறைகளால் இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி தலைமையிலான குழு அண்மையில் லண்டன் சென்றது. அந்தக் குழு பிரிட்டன் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளுடன் ஒரு வாரமாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியது. குறிப்பாக குற்றவாளிகளைப் பரஸ்பரம் ஒப்படைப்பது, விசா பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

இதுகுறித்து ராஜீஷ் மகரிஷி லண்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

குற்றவாளிகளைப் பரஸ்பரம் ஒப்படைப்பது தொடர்பாக பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் குறித்து பிரிட்டிஷ் அரசு கவலை தெரிவித்தது. சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவது உறுதி. பிரிட்டனில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதுகுறித்தும் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து