முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளைபொருட்களை மலிவு விலைக்கு விற்கும் விவசாயிகள்: பார்லி.யில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை

புதன்கிழமை, 19 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிக்கப்படாததால் விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்று விவசாயிகளின் பிரச்சினைகளை ராஜ்யசபையில் எதிர்க்கட்சிகள் நேற்று எழுப்பின.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிக்கப்படாததால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை குறைந்த விலைக்கு விற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு 267-வது விதியின் கீழ் விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில உறுப்பினர்கள் நோட்டீசு கொடுத்தனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து சபையில் விவாதம் நடக்கும்போது உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை எழுப்பலாம் என்று சபையின் துணைத்தலைவர் குரியன் கூறினார்.

முன்னதாக விவசாயிகளின் பிரச்சினையை எழுப்பி பேசிய ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், கடன் தொல்லை மற்றும் கஷ்டத்தால் தினமும் 15 முதல் 20 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றார். நாட்டில் பருப்பு வகைகள் உற்பத்தி 33 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு முற்றிலும் வரி நீக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் பருப்பு வகைகள் தாராளமாக வர மத்திய அரசு அனுமதித்துள்ளது. மேலும் இந்திய விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை மிகவும் குறைந்து விலைக்கு விற்க வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சரத் யாதவ் மேலும் கூறினார்.

விவசாயிகள் நியாயமான விலையை பெறுவதற்கு பதிலாக புல்லட் குண்டுகளை பெற்று வருகிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக்விஜய் சிங் கூறினார்.

சபையில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி சரத்யாதவ் மட்டுமல்லாது பிரமோத் திவாரி,கபில் சிபல் (காங்.) நரேஷ் அகர்வால்,ராம் கோபால் யாதவ் ( சமாஜ்வாடி) சீதாராம் யெச்சூரி ( இ.கம்யூ.) ஆகியோர் 267 விதியின் கீழ் நோட்டீசு கொடுத்துள்ளனர். அதனால் பிறகு அதுகுறித்து விவாதிக்கலாம் என்று குரியன் கேட்டுக்கொண்டார்.

மனித கழிவை மனிதனே அள்ளுவது சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்த பின்னரும் இந்த பழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கேள்வி நேரத்திற்கு பின்னர் ஐக்கிய ஜனதாதளம் உறுப்பினர் அலி அன்வர் அன்சாரி குற்றஞ்சாட்டினார். டெல்லியில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அன்சாரி கவலையுடன் தெரிவித்தார். இந்த 4 பேரும் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் இந்தமாதிரி 2,500 தலித்கள் பலியாகி உள்ளனர். இதுகுறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு நஷ்டஈடு எதுவும் வழங்கவில்லை என்று அன்சாரி மனவேதனையுடன் கூறினார்.

செவ்வாய் கிரகத்திற்கு போவது குறித்து நமது அரசு கூறிக்கொண்டியிருக்கிறது. அதேசமயத்தில் இந்தமாதிரி செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதற்கான கருவிகளையும் உபகரணங்களையும் வழங்கவில்லை. நமது உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை என்றும் அன்சாரி மேலும் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து