கமலஹாசனுக்கு அரசியல் தெரியாது: முதல்வர் எடப்பாடி பேட்டி

புதன்கிழமை, 19 ஜூலை 2017      அரசியல்
CM Edapadi 2017 7 1

சென்னை,  கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு அரசியல் தெரியாது என்றும் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பின்னர் அவர் கூறும் கருத்துக்கு பதில் அளிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அரசியல் தெரியாது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு இவ்வாறு குற்றசாட்டுகள் வைத்தால் அதற்கு பதில் அளிப்பேன். -  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக சட்டமன்றக் கூட்டம் ,கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு பிறகு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. முன்னதாக இக்கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் பற்றி விவாதம் நடந்தது. பல முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில்  சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடந்து முடிந்த பேரவை தொடரில் மக்கள் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். மக்கள் பாராட்டும் வகையில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

நடிகர் கமல் ஹாசன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அரசியல் தெரியாது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு இவ்வாறு குற்றசாட்டுகள் வைத்தால் அதற்கு பதில் அளிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். . அதிமுக இரு அணிகளும் விரைவில் இணையும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து