முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு: அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தகவல்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சாத்தூர்,  தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சாத்தூர் அருகே உள்ள கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வித் திருவிழா நடைபெற்றது.  த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.எஸ்.வி. சித்தன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது, ஆண்டுதோறும் தமிழ்வழி கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள், மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது.  - அமைச்சர் செங்கோட்டையன்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு விருதுடன், ரூ. 10 ஆயிரமும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவ-மாணவிகளுக்கு விருதுடன் ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 32 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

தமிழக மாணவர்கள் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. 54 ஆயிரம் கேள்விகள் கொண்ட பயிற்சி புத்தகம் தயாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் எந்த போட்டித் தேர்விலும் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து