ஆடி அமாவாசையில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க கருவறை தரிசனம் ரத்து கலெக்டர் இல.சுப்பிரமணியன் உத்தரவு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்ததாவது:

முன்னேற்பாடு பணிகள்

திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும்.  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.  போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும்.  மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் இரண்டு நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்.  இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் திருக்கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் திருக்கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

பலர் பங்கேற்பு

 இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார்,.கா.., துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.சிம்டன்ஜீத் சிங் கஹ்லான் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.பிரகாஷ், காவல் ஆய்வாளர்கள், வட்டார வளர்ச்சி, போக்குவரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து