முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் 16 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

புதன்கிழமை, 19 ஜூலை 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருர் போரூராட்சியில் உள்ள தாமரை குளக்கரையில் எழந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் பால்குட அபிஷேகம் மற்றும் 16 ஆம் ஆண்டு திமிதி திருவிழா பிரம்ம உச்சவ நிகழ்ச்சி நேற்று வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

 திமிதி திருவிழா

 நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்தபின் கணபதி பூஜை நடந்தது. பின்னர் காப்புகட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து விரதமிருந்து பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு முத்து பிள்ளையார் கோவிலிலிருந்து பால்குடங்களுடன் புறப்பட்டு பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். மதியம் கோவில் வளாகத்தில் பொங்களிட்டும் வேப்பிலை ஆடை அணிந்தும் நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். இதைத் தொடர்ந்து மாலை பக்தர்கள் முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி வேதாசலம், விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து