முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு: அமெரிக்கா கவலை

புதன்கிழமை, 19 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், இந்தியாவின் ஒரு மாநிலமான சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் உருவாகி இருப்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா,சீனா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில்  டோக லா பகுதி உள்ளது. இதை சீனா வழிமறித்து சாலை அமைத்து வருகிறது. இதை இந்தியா தடுத்து வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இருநாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் உள்ளனர்.

இந்தியா-சீனா இடையே இந்த மோதல் போக்கிற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் சேர்ந்து சில ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து நன்றாக தெரியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நெளரெட் நேற்று வழக்கமாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இந்தியா-சீனா மோதல்போக்கு குறித்த நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஹீதர் பதில் அளித்தார். அமைதி ஏற்பட இருதரப்பினரும் சேர்ந்து நல்ல ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என்று ஹீதர் மீண்டும் கூறினார்.
எங்கள் பகுதியில்தான் சாலை அமைத்து வருகிறோம் என்று சீனா கூறிவருகிறது. அங்கு சாலை அமைத்தால் சிக்கிம் மாநிலத்தில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல சீனா ராணுவம் அனுமதிக்காது என்று இந்தியா கூறிவருகிறது. மேலும் பாதை அமைத்தால் தற்போதுள்ள நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதுகாப்பு விஷயத்திலும் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்றும் சீன அரசுக்கு மத்திய அரசு விபரமாக எடுத்துக்கூறி வருகிறது.

இந்த 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் சிக்கிம் மாநிலத்திற்கு உட்பட்ட இந்த பகுதிக்கு டோக லா என்று இந்தியா பெயர் வைத்துள்ளது. டோகலம் என்று பூட்டான் பெயர் வைத்துள்ளது. ஆனால் சீனாவோ முரண்பாடாக அந்த இடத்திற்கு டொங்குலாங் என்று பெயர்வைத்து உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியா-சீனா இடையே ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து அருணாசலம் மாநிலம் வரை சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லை உள்ளது. இதில் சிக்கிம் மாநிலத்தில் இருநாடுகளிடையே 220 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைப்பகுதி உள்ளது. இவ்வளவு தூரத்திற்கு எல்லைக்கோடு இருப்பதால் இந்தியா எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தியா-சீனா மோதல்போக்கு குறித்து ரஷ்யா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் அமெரிக்காவுடன் உறவை இந்தியா வளர்த்து வருவதுதான்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து