முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கு வெற்றி மேல் வெற்றி: ஜெட்லி

புதன்கிழமை, 19 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துள்ளது. விலைவாசி குறையத்தொடங்கியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரேமாதிரியான ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு அமுல்படுத்தியுள்ளது. அவசர கோலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பல குறைபாடுகள் உள்ளன என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழுக்கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அருண்ஜெட்லி பேசுகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துள்ளது. இது மேலும் விரிவுபடுத்தப்படும். மேற்பார்வை ராஜ்யம் ஒழிக்கப்பட்டுள்ளதோடு விலைவாசியும் குறைந்துள்ளது என்றார். அமுல்படுத்தப்பட்ட ஜூலை 1-ம் தேதி முதல் பொருட்களின் விலை 4 முதல் 8 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றார்.

இதை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு சென்ற விபரத்தையும் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கினார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது மக்களுக்கும் மாநிலங்களுக்கும் மிகவும் நல்லது. கடைசியில் மாநிலங்களுக்கு 80 சதவீத வருவாய் கிடைக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். வரிக்கு மேல் வரி நீண்ட காலத்திற்கு இருக்காது. மாநிலங்களுக்கிடையேயான சரக்கு போக்குவரத்து எந்தவித தடங்கள்களும் இல்லாமல் நடந்துகொண்டியிருக்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் ஒரு கோடிக்கும் மேலான கம்பெனிகள் வந்துள்ளன. இதற்கு முன்பு 80 லட்சம் கம்பெனிகள்தான் வரிவிதிப்புக்குள் இருந்தன. வரிவிதிப்புக்குள் மேலும் பல இனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டின் சந்தைகள் இணைக்கப்பட்டுள்ளன. மேற்பார்வை ராஜ்யம் ஒழிந்தது. மக்கள் மீது வரிச்சுமை குறைந்துள்ளது. மொத்தத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பானது வெற்றி மேல் வெற்றியாகும் என்று கூட்டத்தில் அருண்ஜெட்லி கூறியதாக அனந்த் குமார் மேலும் கூறினார். பார்லி. கூட்டத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து