முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது பணி சிறப்பாக பேட்டிங் செய்வது மட்டுமே - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி விளக்கம்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : எனது பணி சிறப்பாக பேட்டிங் செய்வது மட்டுமே என்று தன்னப்பற்றி வெளியாகும் ஊகங்களுக்கு விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

சுமூகமான முறையில் ...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிசாஸ்திரியுடன் பணியாற்றுவது சுமூகமான முறையில் செல்லும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய அனியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணி  இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடுகிறது.  இந்த தொடர் வரும் 26-ம் தேதி துவங்குகிறது. இதற்காக இந்திய அணி நேற்று இலங்கை புறப்பட்டு சென்றது.

கருதவில்லை ...

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி கூறியதாவது:-

ரவிசாஸ்திரியுடன் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இணைந்து பணியாற்றி வருகிறோம். எனவே, இதற்கு மேலும் புரிந்து கொள்ள எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. இதற்கு முன்னரே இணைந்து பணியாற்றியுள்ளதால்,  எதிர்பார்ப்புகள் என்ன? இருப்பவை என்ன? என்பது நாங்கள் நன்கு அறிவோம். எந்த முயற்சியும் தேவைப்படும் என நான் நினைக்கவில்லை” என்றார்.

உணரவில்லை ...

கடந்த சிலவாரங்களாக நடைபெற்ற நிகழ்வுகளால் கூடுதலாக உங்களுக்கு அழுத்தம் இருந்ததாக நீங்கள் நினைத்ததுண்டா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி,  கூடுதலாக எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை. கூடுதலாக எந்த அழுத்தத்தையும் நான் எடுத்துக்கொள்ளவும் இல்லை. நான் கேப்டனாக இருக்கும் வரை பொறுப்புகளை ஏற்றுக்கொள்வேன். எனது கையில் பேட் மட்டுமே உள்ளது. மிகச்சிறந்த முறையில் பேட் செய்வது மட்டுமே எனது பணியாகும். ஆனால், சுற்றி பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன” என்றார்.

அனைத்திற்கும் பொருந்தும் ...

கும்பிளேவுடனான  மோதல் குறித்து விராட் கோலியிடம் நேரடியாக எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.  இருப்பினும், பயிற்சியாளர் மற்றும் அணி வீரர்கள் இடையேயான தொடர்பு குறித்து  கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, “ புரிதலும் தொடர்பும் அனைத்திற்கும் பொருந்தும். கிரிக்கெட் மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கும் இது அவசியம். தனது வாழ்க்கையின் எங்காவது ஒரு இடத்தில் இத்தகைய உறவுகளை கடந்துதான் வந்திருப்போம். எனவே, அதே விதிகள் பொருந்தும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து