முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் 332 சில்லரை உர விற்பனையாளர்களுக்கு விற்பனை முனைக் கருவி வழங்கப்பட உள்ளது கலெக்டர் சு.கணேஷ் தகவல்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி உரமானியத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில்புதுக்கோட்டை ஏ.என்.எஸ் இன்டோடிரேட் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சில்லரை உர விற்பனை நிலையத்திற்கு, விற்பனை முனை கருவி (பாயின்ட் ஆப் சேல்ஸ்) இயந்திரத்தை   வழங்கினார்.

சேல்ஸ் இயந்திரம்

மேலும், இந்த விற்பனை நிலையத்தில் பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரம் மூலம் உர இருப்பு பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை வட்டாரம், கம்மங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி               எம். கிருஷ்ணன், என்பவருக்கு முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் ஆகிய மூன்று வட்டாரங்களைச் சேர்ந்த சில்லரை உர விற்பனையாளர்களுக்கு விற்பனை முனை கருவி (பாயிண்ட் ஆப் சேல்ஸ்) வழங்கப்பட்டு அவர்களுக்கான பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி பயன்படுத்தும் பயிற்சியைத் துவக்கி வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில்லரை உர விற்பனையாளர் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சில்லரை உர விற்பனையாளர்கள் 136 மற்றும் தனியார் சில்லரை உர விற்பனையாளர்கள் 196) மொத்தம் 332 நபருக்கு விற்பனை முனை கருவி (பாயின்ட் ஆப் சேல்ஸ்) வழங்கப்பட உள்ளது. நேரடி உர மானியத் திட்டத்தின்படி சில்லரை உர விற்பனையாளர்கள் அனைவரும் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவி மூலமே உர விற்பனை செய்ய முடியும்.  உரம் வாங்கும் விவசாயிகள் ஆதார் அடையாள அட்டையுடன் உர விற்பனை நிலையத்திற்கு நேரடியாக வந்து பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவியில் ஆதார் அடையாள எண் பதிவு, கைவிரல் ரேகை பதிவு செய்து தற்போதைய சில்லரை விற்பனை விலைப்படி பணத்தைச் செலுத்தி உரம் பெற்றுச் செல்லலாம் என்றும் விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ்,  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோகரன், வேளாண்மை அலுவலர்கள், உர உற்பத்தி நிறுவனங்களின் மேலாளர்கள், உர விற்பனையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து