முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் பதிவு செய்யும் பணி கலெக்டர் கு.கோவிந்தராஜ் பள்ளிக்கு சென்று கலந்துரையாடல்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      கரூர்

கரூர் மாவட்டம் கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஸ்ணராயபுரம்         அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,  நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலில் விடுதலின்றி பெயர் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளி மாணவ,மாணவியர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 கலந்துரையாடல்

இந்நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையம், தழிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளல் குறித்து 40 வகையான வினா தொகுப்பினை கொண்டு மாவட்ட கலெக்டர் மாணவ,மாணவியர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கலந்துரையாடலின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,இந்திய அரசியல் அமைப்பு சட்டம்,இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம்,உள்ளாட்;சி தேர்தல்கள் நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் குறித்து நன்றாக தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிப்பது தலையாய கடமையாகும் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவரும் வாக்களிக்கலாம், வாக்களிப்பதற்கு ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் விடுதலின்றி பெயர் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்காக கரூர் மாவட்டத்தில் ஜீலை 1 முதல் 31 ஆம் தேதிவரை சமந்தப்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பெயர் பதிவு செய்யலாம்.09.07.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெற்றது. 23.07.2017 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்தி 18 வயது நிறைவடைந்தவர்கள் விடுதலின்றி பெயர் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்மென கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியின் போது கரூர் வருவாய் கோட்டாச்சியர்கள் பாலசுப்பிரமணியன்,விமல்ராஜ,;மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்,வட்டாட்சியர்கள் சக்திவேல் பாலசுந்தரம்,முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து