முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தூதராக கமல்ஹாசன் நியமனம்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை : புரோ கபடி லீக்கின் 5-வது சீசனில் பங்கேற்க உள்ள தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

4 அணிகள் ...

புரோ கபடி போட்டியில் இந்த முறை தமிழகம் உள்ளிட்ட 4 அணிகள் புதிதாக இடம் பெற்று உள்ளன. இதில் தமிழக அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த கபடி போட்டி வருகின்ற ஜூலை 28-ம் தேதி தொடங்க உள்ளது. தமிழக அணியின் உரிமையாளராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், தமிழக அணி கேப்டனாக அஜய்தாகூரும் உள்ளனர்.

அணியின் தூதராக ...

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ”நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்த கபடி விளையாட்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை தூதராக தேர்ந்தெடுத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களில் சிக்கி வரும் கமல், தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து