முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்கள் விற்பனையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் கலெக்டர் வே.சாந்தா தகவல்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      பெரம்பலூர்

அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் 05.08.2011 முதல் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006” அமுலில் உள்ளது.  இது முற்றிலும் புதிய சட்டம் அல்ல,  ஏற்கனவே இருந்த சட்டத்தில் திருத்தங்களுடன் நடைமுறைக்கு வந்துள்ளன.  பழைய சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை புதிய சட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையே வழங்குகிறது.  ஏற்கனவே உணவு வியாபாரிகளுக்கு 05.08.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.  ஆகையால் தற்சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.உணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ.100  அல்லது ரூ.2000-  செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி, இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்து, பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகலுடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.  அவ்வாறு புதுப்பித்துக் கொள்ளும்பட்சத்தில்  தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிம எண் பெறுவதோடு அபராதத்தொகையினையும் தவிர்க்கலாம்.மேலும் வணிகர்கள் தங்கள் வணிக கடைகளுக்கு உரிமம் பெறுவதற்குள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்த வட்டங்களில் - சேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர்களும், மாணவ மாணவிகளும் தங்களது உணவுப் பொருட்களின் தரம் குறித்து புகார் செய்வதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அவர்களுக்கு 9444042322 என்ற மொபைல் எண்ணின் மூலம் கட்செவி (வாட்ஸ்அப்) மூலமாக புகார் தெரிவிக்கலாம்.  அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது.மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த தகவல்கள் மற்றும் விளக்கங்களுக்கு  மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள நியமன அலுவலர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவுப்பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை 04328-224033 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்இவ்வாறு மாவட்ட கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து