பெரியகுளம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தேனி
theni

  தேனி.-தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டி மற்றும் ஜல்லிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை   மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, வடபுதுப்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு கட்டுமானப்பணி, பிரதமமந்திரி ஆவாஸ் யேஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிரதமமந்திரி ஆவாஸ் யேஜனா வீடு கட்டுமானப்பணி, வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மதுராபுரி கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி, தூய்மை பாரத இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்கும் மையம், தாயத்திட்டத்தின் கீழ் ரூ.13.36 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.0.85 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை அமைக்கும் பணி, ஜல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜெட்லூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு தமிழகத்தை சுத்தமான, சுகாதாரமான மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் வீடுகள் இல்லாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின், வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட, குறைந்தபட்ச அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தாய்த்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, ஒரு குக்கிராமத்தில் தற்போதுள்ள வசதிகள் என்னென்ன தேவைப்படும் என்பதை அறிந்து பணிகள் தேர்வு செய்யப்பட்டு தாய் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பராமரித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், கிராம ஊராட்சிகளில் பெறப்படும் மற்றும் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றிடவும், ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை முறையாக பராமரித்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
ஆய்வின்போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  தி.அபிதாஹனீப்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பாரதமணி   பாண்டி   உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து