முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை பயிற்சியாளர் பதவி: ரவிசாஸ்திரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

புதன்கிழமை, 19 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : புதிய பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் சம்பளத்தை கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்பு இருந்த அனில் கும்ப்ளேவை விட கூடுதலாக பெற உள்ளார். அதன் படி அவரது சம்பளம் ஆண்டொண்ருக்கு ரூ.7.5 கோடி ஆகும்.

புதிய பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்திய அணிக்கு ஏற்கனவே இயக்குனராக இருந்த அவர் 2019 உலககோப்பை வரை பயிற்சியாளராக இருப்பார். புதிய பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் சம்பளத்தை கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஆண்டுக்கு ரூ.7.5 கோடி ஊதியமாக பெறுகிறார்.

ரூ.7.75 கோடியாக ...

கிரிக்கெட் வாரிய தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாக குழு உறுப்பினர் டயனா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி ஆகியோர் கொண்ட 4 பேர் குழு இதை முடிவு செய்தது. வர்ணனையாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்ததால் ரவிசாஸ்திரி தனது சம்பளத்தை ரூ.7.75 கோடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இறுதியாக ரூ.7.5 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.25 கோடி அதிகம்

இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேயை விட ரவிசாஸ்திரிக்கு ரூ.1.25 கோடி அதிகமாகும். கும்ப்ளே ஆண்டு சம்பளமாக ரூ.6.25 கோடி பெற்று இருந்தார். கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழுவில் உள்ள தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானையும், பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டையும் பரிந்துரை செய்தது.

பாரத் அருண் சம்பளம்

ஆனால் கிரிக்கெட் வாரியம் இதை அங்கீகரிக்கவில்லை. ஜாகீர்கான், டிராவிட் ஆகியோரால் அணியுடன் நீண்ட காலமாக இருக்க முடியாது என்ற ரவிசாஸ்திரியின் கருத்தை ஏற்று அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் நியமிக்கப்பட்டனர். ரவிசாஸ்திரி முன்பு அணியின் இயக்குனராக இருந்தபோது உள்ள குழு அப்படியே இடம் பெறுகிறது. இந்த வி‌ஷயத்திலும் ரவிசாஸ்திரி வெற்றி பெற்று இருக்கிறார். உதவியாளர்களை தனது விருப்பப்படியே கிரிக்கெட் வாரியத்தின் மூலம் நியமனம் செய்ய வைத்து உள்ளார்.

சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோரது ஆண்டு சம்பளம் ரூ.2.3 கோடி, ரூ.2.20 கோடி, ரூ.2 கோடி என முறையே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து