முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்லா அருகே தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலி

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

சிம்லா, சிம்லா அருகே பயணிகள் சென்ற பஸ் ஒன்று 500 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இமாசலப்பிரதேச மாநிலம் கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள ரெக்ஹாங் என்ற இடத்தில் இருந்து ஒரு தனியார் பஸ்  38 பயணிகளை ஏற்றிக்கொண்டு சோலான் மாவட்டத்தில் நவ்னி என்ற இடத்திற்கு சென்று கொண்டியிருந்தது. இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டியிருந்தபோது ரம்பான் மாவட்டத்தில் உள்ள ஹன்னேரி என்ற இடத்தில் பஸ்ஸின் டயர் திடீரென்று வெடித்ததால் நிலைமாறி 500 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில் 18 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிம்லா அரசு மருத்துவமனையிலும் ஹனேரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அதில் 11 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று சிம்லா நகர் துணைபோலீஸ் கமிஷனர் ரோஹன் சந்த் தாகூர் தெரிவித்தார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்து குறித்து காரணம் அறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஸ்சின் டயர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து