முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்லம் விவகாரம்: படையை வாபஸ் பெற வேண்டுமாம்: இந்தியாவுக்கு சீனா நிபந்தனை

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், இந்தியாவுடனான தூதரக ரீதியாக தொடர்புக்கு எந்தவித தடங்கலும் இல்லை. அதே சமயத்தில் டோக்லம் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு இந்திய படைகள் வாபஸ் பெற வேண்டும் என்று சீனா நிபந்தனை விதித்துள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோக்லம் பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைக்க சீனா முயற்சி செய்கிறது. இதை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் டோக்லம் பகுதியில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளிடையே மோதல்போக்கு அதிகரித்துள்ளது.

பிரச்சினைக்கு தீர்வுகாண தூதரக ரீதியாக இந்தியா முயற்சி செய்து வருகிறது. தூதரக ரீதியாக முயற்சிகள் நடந்தாலும் டோக்லம் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்றால் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முதலில் டோக்லம் பகுதியில் இருந்து இந்தியா முதலில் படையை வாபஸ் வாங்க வேண்டும் என்று சீனா நிபந்தனை விதித்துள்ளது.

இருநாடுகளிடையே தூதரக ரீதியாக தொடர்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இருநாடுகளின் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லு ஹாங் நேற்று பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இருநாடுகளிடையே தகவல் தொடர்புக்கும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கும் முதலில் இந்திய படைகள் வாபஸ் வாங்க வேண்டும் என்றும் லூ கூறினார். இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்பது தெளிவாகும் என்று லூ மேலும் கூறியுள்ளார்.

அதேசமயத்தில் டோக்லம் பகுதியில் சீனா சாலை அமைத்தால் அது தற்போதுள்ள நிலையை மாற்றிவிடுவதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் பாதையை சீனா ராணுவம் அடைத்து விடும் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

வருகிற 26,27 ஆகிய தேதிகளில் பெய்ஜிங்கில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம்நடைபெற உள்ளது. அப்போது டோக்லம் பிரச்சினை பற்றி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது.
ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து டோக்லம் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் இதை சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து