முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற இளம் பெண் கைது

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் இளம் பெண் ஒருவர் 102 ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார். பின் அவர் கைது செய்யப்பட்டார்.

ஹாங்காங்கிலிருந்து ...

ஹாங்காங்கிலிருந்து, சீனாவிற்கு இளம்பெண் ஒருவர் சட்டவிரோதமாக ஐபோன்களை கடத்த முயன்றதால், அவரை விமானநிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஷென்சேன் பாவோ சர்வதேச விமானநிலையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் நடந்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி கோடைக்காலத்தில் ஸ்வெட்டர் வேறு அணிந்து சென்றுள்ளார் இதனால் சந்தேகமடைந்த விமானநிலைய அதிகாரிகள் அப்பெண்ணை சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பெண் ஐபோன்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

102 ஐபோன்கள் ....

அவரிடமிருந்து மொத்தம் 102 ஐபோன்கள் மற்றும் 15 டிசாட் கடிகாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் மொத்த எடை 9 கிலோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு ஐபோன்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது இது முதல்முறையல்ல எனவும் கடந்த 2015-ஆம் ஆண்டில் 84 ஐபோன்களைச் சீனாவுக்குக் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து