முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டு கொன்றேன் - அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அல்கொய்தா தலைவர் பின்லேடனை 3 முறை சுட்டு கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார்.

அதிரடி தாக்குதல்

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கி இருந்தது அமெரிக்க படைக்கு தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது.

ராபர்ட் ஓ நீல் ...

பின்லேடனை கொல்ல சென்ற படையில் யார்-யார் இருந்தார்கள், அவர்கள் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பது போன்ற தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அந்த தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் இது சம்மந்தமாக ஒரு புத்தகம் எழுதி உள்ளார். ராபர்ட் ஓ நீல் தற்போது ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

சுட்டுக்கொன்றேன்

அவர் எழுதியுள்ள புத்தகத்தில், பின்லேடனை நான் தான் சுட்டுக் கொன்றேன். 3 முறை பின்லேடனை சுட்டேன். அதில் அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார். தனது புத்தகத்தில் எழுதியுள்ள தகவல்கள் தொடர்பாக ராபர்ட் ஓ நீல் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து