முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்தாண்டு எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர் பலி

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பாரீஸ், கடந்தாண்டு எய்ட்ஸ் நோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் 2015-ம் ஆண்டை காட்டிலும் சாவு எண்ணிக்கை குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரும் ஞாயிறு அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எய்ட்ய் நோய் தடுப்பு விஞ்ஞான மாநாடு நடைபெற உள்ளது. இதனயொட்டி ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த எய்ட்ஸ் தடுப்பு துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் கடந்த 2016-ம் ஆண்டில் எய்ட்ஸ் நோய்க்கு உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பலயாகியுள்ளனர்.

இது 2015-ம் ஆண்டில் எய்ட்ஸ் நோய்க்கு பலியானவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர்தான் என்றும் எய்ட்ய் நோய்க்கு பலியாகுவது குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளும் எய்ட்ஸ் நோய்க்கு பலியானவர்களும் குறைந்திருப்பதோடு எய்ட்ஸ் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற தொடங்கியுள்ளனர். புதிய எய்ட்ஸ் நோய் கிருமிகள் தொற்றுவதும் குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 3 கோடியே 67 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 95 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி, ஐரோப்பாவின் கிழக்கு பகுதி மத்திய ஆசிய நாடுகளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதியில் அரசியல் ஸ்திரதன்மையின்மைதான் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து