முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடனான எல்லை பிரச்சனையில் சர்வதேச நாடுகள் நம்முடன் உள்ளது: பார்லி.யில் சுஷ்மா சுவராஜ் தகவல்

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சிக்கிம் எல்லையில் இந்திய - சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் நம்முடன் உள்ளது என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

எதிர்க்கட்சிகள் அமளி ...

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளுடன் சிக்கிம் செக்டாரில் சீன ராணுவ ஆக்கிரமிப்பு விவகாரத்தையும் எழுப்பி பெரும் அமளியை ஏற்படுத்தி வருகிறார்கள். மக்களவையில் நேற்று சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையிலும் இப்பிரச்சனையை எழுப்பினார். இந்தியா சீனாவிடம் இருந்து இன்று மிகப்பெரிய ஆபத்தை எதிர்க்கொண்டு உள்ளது. பல ஆண்டுகளாக நான் மத்திய அரசை எதிர்க்கொண்டு வருகின்றேன். சீனா பாகிஸ்தானுடன் இணைந்து உள்ளது. இந்தியாவை தாக்க முழு தயார் நிலையில் சீனா உள்ளது.சீனா இந்தியாவின் மிகப்பெரிய எதிரிநாடாகும். மத்திய அரசின் நடவடிக்கை என்ன? என கேள்வியை எழுப்பினார்.

மாநிலங்களவையிலும் ...

மாநிலங்களவையிலும் இப்பிரச்சனை எழுப்பட்டது. மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிக்கிம் செக்டாரில் சீன ராணுவ செயல்பாடு குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “எல்லையில் இந்திய - சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதில் சர்வதேச நாடுகள் நம்முடன் உள்ளது,” என்பதை தெளிவுப்படுத்தினார். “பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. இந்தியாவை சீனா வளையமிடுகிறது என சொல்ல முடியாது. முச்சந்திப்பில் ஒருதலைப்பட்சமாக எல்லை நிலையை மாற்ற முயற்சி செய்கிறது.

பேச்சுவார்த்தைக்கு தயார் ...

இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கையானது. பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயார், பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு அழைக்க வேண்டும். இப்போது நாம் முச்சந்திப்பு விவகாரத்தில் தலையிட்டு உள்ளோம், இவ்விவகாரம் நேரடியாக நம்முடன் தொடர்பு கொண்டு உள்ளது. சீனா முச்சந்திப்பில் நிலையை மாற்றினால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் நமக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது என்றார்.

உஷார் நிலையில் இந்தியா 

சீனாவிற்கு எதிராக இந்தியாவால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதையும் சுஷ்மா சுவராஷ் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார். எந்தஒரு அச்சுறுத்தலையும் கையாள இந்தியா உஷார் நிலையில் உள்ளது.

மேலும், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவை சீனா வளையமிடுகிறது என கூறுவது தவறானது. இந்தியா தன்னுடைய பாதுகாப்பு நிலைகளை உன்னிப்பாக கவனிக்கிறது, இந்தியாவை யாராலும் சுற்றி வளைக்கமுடியாது என சுஷ்மா கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து