முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ஆடும் 2 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : இலங்கை அணி உடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் ...

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம் மாலை இலங்கை சென்றடைந்தது. இந்தியா- இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி காலேயில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

பயிற்சி ஆட்டம்

ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை நடக்கிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டி செப்டம்பர் 6-ந்தேதி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது. இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 டெஸ்ட் கொண்ட இந்த தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இதனால் இந்த முறையும் இந்திய அணி இலங்கை மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து