முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு - தினேஷ் கார்த்திக் பேட்டி

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை : இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு  என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அசத்தல் ...

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் ரஞ்சி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பயணாக அவருக்கு மேற்கிந்திய தீவு அணியுடனான சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியில் இடம் கிடைத்தது. அத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் விளாசிய அவர், டி20 தொடரில் 48 ரன்கள் குவித்து அசத்தினார்.

சாதிக்க முடியும் ...

இந்நிலையில் அவர், டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதே தனது இலக்கு என்று கூறியுள்ளார். மேலும் தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறிவிட்டதாகவும், ஆனால் டெஸ்ட் போட்டிகளிலும் தன்னால் சாதிக்க முடியும்.

7 ஆண்டுகள் ...

டெஸ்ட் போட்டிகளில் எனது பேட்டிங்கின் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும். இந்திய அணியில் இடம்பிடித்து டெஸ்ட் போட்டிகளுக்கான வெள்ளைச் சீருடை அணிய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்து 7 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து