முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு, பள்ளி சுவர் இடிந்து பலியான 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வீடு, பள்ளி சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியை முதலமைச்சர் நிவாரணை நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை - ராமநாதபுரம் ...

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், இலந்தைக்குளம் தெற்கு குடியிருப்பைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி சாந்தி வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தார். சென்னை தண்டையார்பேட்டை வட்டம், காசிமேடு பவர் குப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் தாஸ் பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். மதுரை தொடக்கப்பள்ளி ஒன்றின் கேட் மீது குடிநீர் லாரி மோதி, பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில், மேட்டுத் தெருவைச் சேர்ந்த பழனிபிச்சை மனைவி பவானி, அவரது மகள் பவித்ரா, கணேசன் மகள் செல்வி அனுதர்ஷினி ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

நிதியுதவி அறிவிப்பு

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவருக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து