முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் பிரச்சனையை எழுப்பி பார்லி.யில் எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : விவசாயிகள் பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால, நேற்று மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கூச்சல் - குழப்பம்

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியது முதல் விவசாயிகள் பிரச்சனை, பசு குண்டுகள், சீன விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 4-வது நாளான நேற்றும் மக்களவை தொடங்கியது முதல் விவசாயிகள் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அவை முதலில் 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், அடுத்தடுத்து இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

அ.தி.மு.க எம்.பி.கள்

இதனிடையே, மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சனை, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், ஜி.எஸ்.டி வரியின் பாதிப்புகள் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பினர். இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க எம்.பி. நவநீதகிருஷ்ணன் தமிழக விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக தான் போராடுகிறார்கள், மாநில அரசுகளுக்கு எதிராக இல்லை. விவசாயக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். ஜி.எஸ்.டி.யிலிருந்து ஜவுளித்துறைக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜிலா சத்தியானந்த் வலியுறுத்தினர். அதேபோல், மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

மாநிலங்களவையில் அமெரிக்காவில் ஹெச்-1 பி விசா குறித்து மோடி பேசாதது ஏன் என்ற கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து