பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை செய்தியாளர்கள் சங்கம் நன்றி

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      மதுரை
adappati

மதுரை,- பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை செய்தியாளர்கள் சங்கம் தனது மனமார்ந்த நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து மதுரை செய்தியாளர்கள் சங்க தலைவர் எஸ்.நம்பிராஜன், செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், பொருளாளர் ஒ.முருகன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

ஜனநாயகத்தின் 4 - வது தூணாக விளங்கும் நாள்தோறும் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற பின்பு மனநிறைவோடும், அமைதியோடும் வாழ நலம்பெறும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது ஆட்சி காலத்தில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தினை 3 - முறை உயர்த்தி அறிவித்துள்ளார்.

 

அவரது சீரிய வழியில் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அரசு பத்திரிகையாளர் ஓய்வூதியத்தினை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தினை ரூ.4750 விலிருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தி துறை செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு மதுரை செய்தியாளர்கள் சங்கம் தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து