முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளிகளில் முன் மாதிரியாக திகழும் ஸ்ரீரெங்கபுரம் அரசுபள்ளி

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரத்தில் வைகை கரையோரம் அமைந்துள்ளது ஊராட்சி நடுநிலை பள்ளி இங்கு 96 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அமைதியாக வைகைகரையில் அமைந்துள்ள பள்ளியில் நுலைந்த போது குருவிகள்,பறவைகள் சத்தம் நம்மை வருக என வறவேற்கிறது.உள்ளே சென்று பார்த்த போதுதான் தெரிந்தது அங்கு குருவிக்கும் பறவைக்கும் பாடம் நடக்குது என்று.நம் குழந்தைக்கு உனவுவளிக்க மறுக்கும் இக்காலத்தில் குருவிகளுக்கு உணவுவளிக்கின்றனர்.இப்பள்ளி மாணவர்கள் பறவைகளுக்கு கூடு அமைத்து அவற்றை பேனி காத்து வருகின்றனர்.இயற்கை எழில் கொஞ்சும் பள்ளி வளாகத்தில் கூடுகள் அமைத்து வேஷ்ட்டு தண்ணீர் புட்டிகளில் நீர் தறப்படுகிறது.காமராஜர் பிறந்த நாளன்று இங்கு பேச்சு போட்டி,கவிதை போட்டி,நடனம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக மாணவர்கள் தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அடையாள அட்டை,பூத் சிலிப்,மற்றும் வாக்குக்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் மாணவர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.இது பற்றி தலைமை ஆசிரியர் உமாஜோதி கூறுவதாவது இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமே கற்று தருவது இல்லை.பொது அறிவு,அரசியல்,தேர்தல்,இயற்கையை காப்பது,மரம் வளர்ப்பது,அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பது,பறவைகளுக்கு உணவளிப்பது,சக மனிதர்களை நேசிப்பது,அனைவரும் ஒர் இனம் என்று உணர்த்துவது இது போன்ற அறிவை இப்போது அளித்தால் இவர்கள் சிறந்த மாணவர்களாக வருவார்கள்.இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் வீடுகளில் மரம் வளர்க்கின்றனர்.வேஷ்ட்டு என்று தூக்கி எரியும் தண்ணீர் புட்டிகளை வைத்து சேர்,மேசை மற்றும் அலங்கார பொருள்கள் செய்து பள்ளியை அழகு படுத்துகிறார்கள் எங்கள் பள்ளி மாணவர்கள் என்று கூறினார்.இது போன்ற பள்ளிகள் மாவட்டம் முழுவதும் உருவாக வேண்டும் என்று பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து