முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

சென்னை, தமிழக எம்.எல்.ஏ-க்களின் மாத சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள  எம்.எல்.ஏ-க்கள் சம்பவளம் விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். இந்திய அளவில் தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது.
இவர்கள் மாதந்தோறும் சம்பளம் மற்றும் படிகளுடன் சேர்த்து பெறும் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம். அதேபோல், மிகவும் குறைந்த சம்பளம் வழங்கும் மாநிலம் திரிபுரா. இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் மாதந்தோறும் பெறும் தொகை 17 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும்தான்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்கள் பெறும் சம்பள விவரம் வருமாறு:-

  • தெலுங்கானா - 2.50,000
  • டெல்லி               - 2.50,000
  • உத்தரபிரதேசம் - 1,87,000.
  • மகாராஷ்டிரா - 1,50,000.
  • ஆந்திரா - 1,30,000.
  • இமாசலபிரதேசம் - 1,25,000.
  • அரியானா - 1,15,000.
  • ஜார்க்கண்ட் - 1,11,000.
  • மத்திய பிரதேசம் - 1,10,000.
  • சத்தீஷ்கர் - 1,10,000.
  • தமிழ்நாடு - 1,05,000.
  • பஞ்சாப் - 1,00, 000.
  • கோவா - 1,00,000.
  • பீகார் - 1,00,000.
  • மேற்கு வங்காளம் - 96,000.
  • கர்நாடகா - 60,000.
  • சிக்கம் - 52,000.
  • குஜராத் - 47,000.
  • கேரளா - 42,000.
  • ராஜஸ்தான் - 40,000.
  • உத்தரகாண்ட் - 35,000.
  • ஒடிசா - 30,000.
  • மேகாலயா - 28,000.
  • அருணாசலபிரதேசம் - 25,000.
  • அசாம் - 20,000.
  • மணிப்பூர் - 18,500.
  • நாகலாந்து - 18,000
  • திரிபுரா - 17,500.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து