முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு தடை எதிரொலி: எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி குறைந்தது

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மத்திய அரசின் தடை காரணமாக எருமை மாட்டு இறைச்சி, ஏப்ரல்-மே மாதங்களில் 4.35 சதவீதம் குறைந்துள்ளது.

கடும் எதிர்ப்பு

இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் தடை காரணமாக எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

4.35 சதவீதம் குறைவு

ஏப்ரல்-மே மாதங்களில் எருமை மாட்டு இறைச்சி 4.35 சதவீதம் குறைந்துள்ளது. பாராளுமன்ற மேல்சபையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

புகார் இல்லை

இறைச்சி மற்றும் தோல் வியாபாரிகளிடம் இருந்து உற்பத்தியை தடுப்பதாக எந்தவித புகாரும் எங்கள் அமைச்சகத்துக்கு வரவில்லை. ஆனால் புள்ளி விவரப்படி ஏப்ரல் - மே மாதங்களில் எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே காலக்கட்டத்தில் 4.35 சதவீதம் குறைந்துள்ளது.

ரூ.3413 கோடியாக ...

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதி ரூ. 3566 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ஏற்றுமதி ரூ 3413 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பதிலில் தெரிவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து