முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல்ஹாசனை பார்த்து தமிழக அரசு அஞ்சவில்லை: அமைச்சர் ஜெயகுமார் பதிலடி

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, நடிகர் கமல்ஹாசனை பார்த்து தமிழக அரசுக்கு அச்சமில்லை என்று நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை நிதியமைச்சர் டி.ஜெயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முகவரிகளை நீக்கவில்லை ...

கமல்ஹாசனைக் கண்டு தமிழக அரசு அச்சம் கொள்ளவில்லை. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்பதுதான் அரசின் நிலை. சட்டமன்ற உறுப்பினர்களின் இ-மெயில், முகவரிகளை நீக்கவில்லை. எம்.எல்.ஏ.க்களில் இருந்துதான் அமைச்சர்கள் வருகிறார்கள் என்றார். அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு பேசுகின்றனர். ஆதாரமில்லாமல் முகாந்திரம் இல்லாமல் பேசினால் சட்டத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறது. ஆதாரமிருந்தால் நீதிமன்றத்தை அணுக வேண்டும். அதைவிடுத்து வெப்சைட், இ-மெயில் மூலம் புகார் சொல்லச் சொல்வது குழந்தைதனமானது.போகாத ஊருக்கு வழிச்சொல்லும் செயல். ரசிகர்களையும் பொதுமக்களையும் திசைதிருப்பும் செயல் என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசு முன்னோடி ...

டெங்கு காய்ச்சல் குறித்து எழுப்பப்பட் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “பருவக்காலங்களில் உருவாகும் டெங்கு போன்றவற்றை தடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. குற்றம்சாட்டுகிற கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த விழிப்புணர்வு படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று தரமான சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து