முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒழுகும் கூரை வீட்டில் வசித்தேன்: புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சிறு வயதில்  மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும் என்று புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ராமாநாத் கோவிந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:

சிறு வயதில்  மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும். இதனால் மழை விடும் வரை நானும் எனது சகோதர, சகோதரிகளும் சுவர் ஓரம் ஒதுங்கி நிற்போம். - புதிய ஜனாதிபதி ராமாநாத் கோவிந்த்

என்னைப் பொறுத்தவரை இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். இப்போது டெல்லியில் மழை பெய்கிறது. இது என்னுடைய சொந்த ஊரில் வசித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை நினைவுபடுத்துகிறது. சிறு வயதில் இருந்தபோது மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும். இதனால் மழை விடும் வரை நானும் எனது சகோதர, சகோதரிகளும் சுவர் ஓரம் ஒதுங்கி நிற்போம்.

வளமுடன் வாழ அயராது பாடுபடுவேன்

நாடு முழுவதும் என்னைப் போல பலர், இன்றும் விவசாய வேலையிலும், கூலி தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மழையில் நனைந்தும் வியர்வை சிந்தியும் கஷ்டப்படுகின்றனர். உங்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் ஜனாதிபதிஅலுவலகத்துக்குச் செல்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வளமுடன் வாழ அயராது பாடுபடுவேன்.

நாட்டின்  ஜனாதிபதியாவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. அப்படி ஒரு விருப்பமும் இல்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பது மற்றும் அதன் கவுரவத்தை பராமரிப்பதை கடமையாகக் கொண்டு செயல்படுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து