முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் மருத்துவமனையிடம் ரூ.5 கோடி லஞ்சம்: கேரள பா.ஜ.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், கேரளாவில் தனியார் மருத்துவமனையிடம் இருந்து ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து மாநில பா.ஜ.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பா.ஜ.க பிரமுகரான ஆர்.எஸ்.வினோத் என்பவர் இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக ஒரு தனியார் மருத்துவமனையிடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க குழு நடத்திய விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாலக்காடு தொகுதியின் எம்.பி.யான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பா.ஜ.கவில் இருந்து ஆர்.எஸ்.வினோத் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதை மாநில பா.ஜ.க தலைமை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து