முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனக்குத் தானே மன்னிப்பு வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் :  தனக்குத் தானே மன்னிப்பு வழங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை வெற்றி பெறச் செய்ய ரஷ்யா திரைமறைவு செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து எப்.பி.ஐ முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்டு டிரம்பின் மகன் ஜுனியர் டிரம்ப், ரஷ்ய அதிபர் மாளிகையுடன் நெருங்கிய தொடர்புடைய அந்த நாட்டு வழக்கறிஞர் நடாலியாவை சந்தித்துப் பேசியது அண்மையில் அம்பலமானது.

இந்தப் பின்னணியில் ராபர்ட் முல்லர் குழுவினர் அதிபர் டிரம்புக்கு எதிராக முக்கிய ஆதாரங்களைத் திரட்டியிருப்ப தாகக் கூறப்படுகிறது. எனவே சிறப்பு குழுத் தலைவர் பதவியில் இருந்து ராபர்ட் முல்லரை நீக்க டிரம்ப் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட் டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

அதிபர் டிரம்புக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அதிபர் தேர்தல் விவகாரம் தொடர்பான விசாரணையில் குடும்பத்தினரையும் நண்பர்களை யும் காப்பாற்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாமா என்பது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

இதே அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்குத் தானே மன்னிப்பு வழங்குவது குறித்தும் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக டிரம்பின் சட்ட குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து