முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் செயலாளராக சஞ்சய் கோத்தாரி நியமனம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நாட்டின் 14வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த்தின் புதிய செயலாளராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
புதிய ஜனாதிபதி அலுவலகச் செயலாளர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் பணி நியமனக் குழு நேற்று நியமித்துள்ளது. அதற்கான உத்தரவுகள் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மூலம் நேற்று இரவு  வழங்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

ஜனாதிபதியின்  செயலாளராக பொதுத் துறை நிறுவனங்களின் தேர்வாணையத் தலைவர் சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளர் அசோக் மாலிக் கோவிந்த் ராஷ்டிரபதி பவணின் பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   மூத்த குஜராத் மாநில வனத்துறை அதிகாரி பரத் லால் குடியரசுத் தலைவரின் இணைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் பணி நியமனக் குழு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் இந்த நியமனங்களை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுத் துறை நிறுவனங்களின் தேர்வாணையத் தலைவராகப் பொறுப்பேற்ற கோதாரி, 1978 ஆண்டில் ஹரியானா மாநிலத்தில் தேர்வான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவராக தேர்வு பெற்றவர். அவர் 2016 நவம்பரில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவன வாரிய தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். மூத்த பத்திரிகையாளர் அசோக் மாலிக் பத்மஸ்ரீ விருதுபெற்றவர். தற்போது கொள்கை சிந்தனைகளை வகுக்கும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் உயர்ந்த பொறுப்பில்இருந்துவருகிறார். இந்திய வனத்துறை அதிகாரியாக 1988ல் தேர்வான பரத் லால், புதுடெல்லியில் உள்ள குஜராத் அரசு குடியிருப்புகள் ஆணையராக செயல்பட்டுவருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து