முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி திட்டம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மாயாவதி, உ.பி.யில் தீவிர சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். மக்களவை இடைத்தேர்தலில் இம்மாநிலத்தின் பூல்பூர் தொகுதி யில் அவர் போட்டியிட திட்ட மிடுவதாக தெரியவந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடந்த செவ்வாய்க்கிழமை, மாநிலங் களவையில் தன்னைத் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என ஆத்திரமடைந்தார். அவையி லிருந்து ஆவேசமாக வெளியேறிய அவர், மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்தக் கடிதம் விதிமுறைப்படி இல்லை எனவும் அவரது ராஜினாமா ஒரு நாடகம் எனவும் பாஜக கூறியது. பிறகு மாயாவதி தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அளித்தார். இக்கடிதம் ஏற்கப்பட்டுவிட்டது.

 பூல்பூரில் மாயாவதி போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இங்கு பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டால் அது 2019 மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாதிப்பை ஏற்படுத்தும். - மாயாவதி

இந்நிலையில் மாயாவதி இன்னும் சில நாட்களில் உ.பி.யில் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். இதற்கு முன்பாக தனது கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இதில் உ.பி.யின் பூல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன.

பூல்பூரி தொகுதியில் போட்டியிட திட்டம்

மோடி அரசு பதவியேற்றது முதல், நாட்டில் மதக்கலவரம் மற்றும் சாதிகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வருகின்றன. . இதை மாயாவதி தனது உ.பி. பயணத்தில் எடுத்துரைத்து பாஜகவிடம் நாங்கள் கணிசமாக இழந்த தலித் வாக்குகளை மீட்டெடுப்பார். மாயாவதி பூல்பூரில் போட்டியிட்டால் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா எனப் பார்க்க வேண்டியுள்ளது. இதைப் பொறுத்து தான் 2019 மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி எதிர்க்கட்சிகளுடன் சேரும்” என்று தெரிவித்தனர்.

கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதில், பூல்பூரில் மாயாவதி போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இங்கு பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டால் அது 2019 மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மாயாவதியின் கணிப்பாக உள்ளது. மாயாவதி போட்டியால் சமாஜ்வாதி, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் அவருக்கு ஆதர வளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  இத்தொகுதி முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகள் நிறைந்த தொகுதியாகும். கடந்த 10 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத மாயாவதிக்கு தனது அரசியல் செல்வாக்கை மீட்க இத்தொகுதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து