முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது : இலங்கை கடற்படை அட்டூழியம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகப்பட்டினம் :   கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரவி பாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன், வீரையன், கண்ணையன், அண்ணாத்துரை , அமிர்தலிங்கம், குமரன், சித்ரவேல், மாரியப்பன் ஆகிய 8 மீனவர்கள் கடந்த 16ம் தேதி நள்ளிரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர
நேற்றிரவு நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது .

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய சரகம் கீச்சாங்குப்பம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 17ஆம் தேதி 1 மணிக்கு ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த ரவிபாலன்,42, சின்னதம்பி என்பவருக்கு சொந்தமான IND TN 06 MM 180.என்ற விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அமிர்தலிங்கம்,குமரன், 30 சக்திவேல், அண்ணாதுரை பக்கிரிசாமி, வீரையன், பாலமுருகன், ராஜேஸ், மாரியப்பன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

நேற்று 9 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 42 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். காங்கேசன் துறை கடற்படை முகாமில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து