முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக கென்யாவில் உருவான ஜல்லிக்கட்டு திரைப்படம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்று கென்யாவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குர் சந்தோஷ் கோபல் இயக்கும் படம் ஜல்லிக்கட்டு. கென்யாவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன.

முதல் முறையாக, ஒரு தென்னிந்திய படம் கென்யா மற்றும் குறிப்பாக மாசாய் மாரா பழங்குடி மக்களின் மத்தியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் உள்ள மசாய் பழங்குடியினர்கள், பழங்கால வாழ்க்கை தற்போதும் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

மேலும் அவர்களது தனித்துவமான வாழ்க்கைமுறையையும் தொடர்கின்றனர். எந்த தொழில்நுட்ப வசதியையை பெறாத அவர்கள் இன்னும் அவர்கள் கால்நடை மற்றும் இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கும் மாசாய் பழங்குடி மக்கள் மற்றும் அவர்களின் கால்நடைகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 15 நாட்களுக்கும் மேலாக அவர்களுடன் தங்கி அவர்களின் பாரம்பரியத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கால்நடைகளின் டி.என்.ஏவும் காங்கேயம் காளைகளின் டிஎன்ஏவும் ஒத்து போவதாகவும் அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து