முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் - திருப்பூரில் முதல்வர் எடப்பாடி பேட்டி

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : “நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

நூற்றாண்டு விழா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தலைநகரங்களில் ...

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் வழி நடக்கும் இந்த அரசு அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி அவரது புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

தொடர்ந்து அழுத்தம் ...

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்க அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து  அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழக அமைச்சர்கள் 5 பேர், டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளோம். முடிந்த அளவுக்கு தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அவர்களது விருப்பம். தேசிய வங்கிகளில் கடனை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராடுவது அவர்களது விருப்பம்.

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரெயில் திட்டம் கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு ஆகும். இந்த மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

டெங்கு தடுப்பு

டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு தண்ணீரில் தான் பரவுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கமல், திரைப்பட நடிகர்.  அவர் அரசியலுக்கு வரவில்லை. கமல் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்களுக்கு பதில் அளிப்போம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து