முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும், ஹீரோவாகவும் சாதிக்கவேண்டும் நடிகர் அனந்த்ராம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

Source: provided

"மீசைய முறுக்கு" என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் "அனந்த்ராம்". படத்தில் 'ஹிப் ஹாப் தமிழா ஆதியின்' தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவர் பேசுகையில்,‘ நடிகனாகவேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைபட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி ஸ்கூல், லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன்.

'பொன்மாலைப் பொழுது', 'புகழ்' ஆகிய படங்களில் சிறிய வேடங்களிலும், தியேட்டர் நாடகங்களிலும் நடித்தேன். பிறகு நண்பர்கள் மூலமாக ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதி அண்ணாவின் தம்பியாக நடித்தேன். படபிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. விவேக் சார் போன்ற அனுபவமிக்க கலைஞருக்கு நான் மகனாக நடித்தது பெருமகிழ்ச்சி. இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இருந்ததால் சண்டை பயிற்சி மற்றும் பாக்ஸிங் கற்றுக்கொண்டேன்.

இதனால் சண்டைக் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் என்னுடைய நடிப்பைப் பற்றி பாராட்டி பேசியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதற்காக இந்த தருணத்தில் *ஆதி அண்ணாவிற்கு* நன்றிச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும், ஹீரோவாகவும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.

எல்லா வகையான சவாலான கேரக்டர்களிலும் நடிக்கும் சிறந்த நடிகராகவே இருக்க விரும்புகிறேன்."மீசைய முறுக்கு" படத்தின் மூலம் ஒரு நல்ல நட்பு வட்டாரம் கிடைத்திருக்கிறது. இதனை தக்கவைத்துக் கொண்டே தொடர்ந்து திரையுலகில் இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் நடித்து முன்னேறவே ஆசைப்படுகிறேன்.

இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறேன். தமிழிலும் நடிக்கவிருக்கிறேன் அனந்த்ராம் சந்தோஷம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து