முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன, ரஷ்ய கடற்படைகள் பால்டிக் கடலில் போர் ஒத்திகை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

காலினின்கிராட் : சீன, ரஷ்ய கடற்படைகள் இணைந்து பால்டிக் கடலில் வரும் 25, 26-ம் தேதிகளில் போர் ஒத்திகை நடத்த உள்ளன.

இதற்காக சீனாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் நேற்று ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதிக்கு வந்தன. அந்த போர்க்கப்பல்களின் தளபதிகளை ரஷ்ய கடற்படை தளபதிகள் வரவேற்றனர். சீன, ரஷ்ய கடற்படைகள் இணைந்து பால்டிக் கடல் பகுதியில் கடல், தரை, வான் வழி போர் பயிற்சிகளில் ஈடுபட உள்ளன.

போலந்து மற்றும் பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள எஸ்தோனியா, லாட்வியா, லுதுவேனியா நாடுகளில் நேட்டோ தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் பால்டிக் கடலில் போர் பயிற்சியை நடத்துகின்றன என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து