முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல் முன்று மொழிகளில் வருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

Source: provided

எஸ்.எஸ்.இராஜமௌலி உதவியாளர் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருகிறது. வாழ்க்கை என்பது ஒரு குறுகிய காலம் விரைவில் சம்பாதித்து வாழ்க்கையை ஆசைதீர அனுபவிக்க வேண்டும் .என்று வாழும் ஹீரோ அதே மாதிரி எண்ணம் கொண்ட அவனுடைய நண்பன் இவர்கள் மத்தியில் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத ஒரு பெண் வந்து சேருகிறாள்.இந்த மூவரும் எதிப்பாராத ஒரு மிகபெரிய ஆபத்தில மாட்டிக் கொள்கிறார்கள்.

அந்த ஆபத்திற்கு காரணம் அந்த பெண் தான், என்பதே இக்கதையின் முக்கிய திருப்பம் .அந்த ஆபத்து என்ன? அதிலிருந்து மூவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை இது வரை திரையில் வராத புதிய கோணத்தில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். ஸ்ரீ சரஸ்வதி பிலிம்ஸ் சார்பில் செந்தூரப்பூவு கிருஷ்ணா ரெட்டி தாயரித்துள்ளார்.

படப்பிடிப்பின் முதல் நாளே திட்டமிட்ட காட்சிகளை முடிக்க வேண்டுமென்பதால் தொடர்ச்சியாக 23 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெற்ற து.அதற்கு நடிகர் நடிகை பட குழுவினரும் ஒத்துழைத்து மறக்க முடியாத சம்பவம் என்றார் இயக்குனர்.ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா நதியின் மைய பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் தூண் அருகில் கதாநாயகன் கதாநாயகி படகில் சென்று அமர்ந்த படி காதல் காட்சி எடுக்கப்பட்டது பட குழுவினர் கரையோரத்திலும் , பாலத்திலும் இருந்தனர்.

நேரம் செல்ல செல்ல ஆற்றுத் தண்ணீர் அவர்களது இடுப்பளவு உயர்ந்தது. நாயகியோ கத்திக்கொண்டே நாயகனின் கட்டிப்பிடித்துக்கொண்டே இருக்க சில நிமிடங்களில் தவறி ஆற்றில் விழுந்துவிடுகிறார்கள். நாயகனுக்கு நீச்சல் தெரிந்தால் நாயகியை முதுகில் சுமந்து காப்பாற்றி கரை சேர்ந்தார்.சின்ன சின்ன கண்களாலே சித்திரங்கள் வரையற நீ - என்ற சினேகன் எழுதிய பாடல் கேட்போரை முணு முணுக்க வைக்கும் இந்த படத்தில் நாயகன் நாக அன்வேஷ்நாயகி மும்பை நடிகை ஹேபா பட்டேல் சுமன் ஷயாஜி ஷுண்டே , பிரதீப்ராவத், பிதாமகன் மகாதேவன் மற்றும் கபீர்சிங் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு குணா, இசை பீம்ஸ் பாடல்கள் சினேகன் , வசனம் வி.பிரபாகர், நிர்வாக தயாரிப்பு ஆர்.பன்னீர்செல்வம், திரைக்கதை தயாரிப்பு செந்தூர்ப்பூவுவ்கிருஷ்ணா ரெட்டி ,கதை இயக்கம் பாகுபலி கே.பழனி ,மக்கள் தொடர்பு வெங்கட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து