முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'புயலா கிளம்பி வர்றோம்' படம் ஜூலை 28 -ல் வெளிவருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

Source: provided

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் V .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ' புயலா கிளம்பி வர்றோம் '. இது மதுரை மண் சார்ந்த கதை. படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல .அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை .நாயகனாக தமன், நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர், சிங்கம்புலி, திருமுருகன், அழகன் தமிழ்மணி, ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்.

இயக்குநரிடம் படம் பற்றிக் கேட்ட போது," இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.இது மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் மதுரை, சென்னை, கொடைக்கானல் , பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களில் படப்பிடிப்பு நடந் துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். 31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம்." என்றவர் தயாரிப்பாளரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

"தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர் தான் . இருந்தாலும் , எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு நாளும் அவர் வந்ததில்லை. படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான் தான் தினமும் பணப்பட்டுவாடா செய்தேன்.

அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர்" என்கிறார் .இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் விஜய்.வி., இசையமைத்திருப்பவர் சார்லஸ் தனா இருவருக்கும் இதுவே முதல் படம். எடிட்டிங் - எஸ்.சதிஷ் குமார், வசனம் _ கே.நந்தகுமார் ,கலை இயக்கம் - முத்துவேல், நடனம் -பாலாஜி ,தினா, ராதிகா. ஸ்டண்ட் - ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு நிர்வாகம் -ஒய்.எஸ்.டி. சேகர்.படத்துக்குத் தணிக்கை முடிந்து
யூ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.' புயலா கிளம்பி வர்றோம் 'படம் ஜூலை 28-ல் வெளியாகிறது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து